Friday 24 October 2014

பீடா கடைக்காரருக்கு ரூ. 132 கோடி மின்கட்டண ரசீது..!


அரியானா மாநிலம் கோகானா டவுனில் பீடா கடைக்காரர் ஒருவருக்கு ரூ. 132.29 கோடி மின்கட்டண ரசீது வழங்கப்பட்டுள்ளது.

மின்சார தொகையை பார்த்ததும் தீபாவளி நாளில் பீடா கடைக்காரர் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “நான் மின்கட்டண ரசீதை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

ரசீதில் எண்களில் மட்டும் தொகை தவறாக குறிப்பிடப்படவில்லை. எழுத்துவடிவிலும் தவறாகவே எழுதப்பட்டு இருந்தது. நான் வாடகைக்கும் கடை நடத்தும் ஒரு சிறு கடைக்காரர். நான் ஒரு பல்பு மற்றும் காற்றாடியை பயன்படுத்துகிறேன்.

எனக்கு எப்போதும் ரூ. 1000-த்திற்கு கீழே மின்சார கட்டணம் வரும். இந்த மின்சார கட்டண ரசீது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்றார்.

இதுதொடர்பாக இன்று மின்துறை அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட ரசீதை பெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரியானா மின்துறையில் இதுபோன்ற தவறு நடப்பது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு இதுபோன்ற சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முராரி லால் என்பவருக்கு ரூ.  234 கோடிக்கு மின்கட்டண ரசீது வழங்கப்பட்டது. 

Tags:

0 Responses to “ பீடா கடைக்காரருக்கு ரூ. 132 கோடி மின்கட்டண ரசீது..!”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2014 தமிழ் 4 தமிழன்