Wednesday 22 October 2014

நமது உடலின் சிறுநீரகத்தின் பயன்பாடுகள் - இதோ உங்களுக்காக..!


நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலின் அனைத்துப் பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பாகத்தில் குறை ஏற்பட்டாலும் அது உடலின் அனைத்துப் பாகங்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு பாகம்தான் சிறுநீரகம்.

சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சிறு குறையும் உடலில் உள்ள பல பாகங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்க ஆரம்பிக்கும். நமக்கு ஒரு உடலின் பல உறுப்புக்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு சிறுநீரகம்தான் முக்கியக் காரணமாகும். உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், தேவையில்லாத உப்புச் சத்துக்களையும் வடிகட்டும் ஒரு முக்கியமான பணியை சிறுநீரகம் செய்கிறது.

உடலில் உள்ள நீரின் அளவையும் அது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் இரத்த அழுத்தம், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் அமிலங்களின் அளவுகளையும் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் நம் உடலை அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் நம் சிறுநீரகங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பரம்பரை பரம்பரையாக சிறுநீரக வியாதிகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியம். உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதாவது உங்கள் உணவுக் கட்டுப்பாடு, சிறுநீரகத்தை நன்றாகச் செயல்பட வைக்க உதவும். சுத்தமான மற்றும் ஃப்ரெஷ்ஷாக சமைக்கப்பட்ட உணவுகளையே உண்ணுங்கள்.

நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை நிறைய சேர்த்துக் கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லது. சிறுநீரகத்தின் செயல்பாடுகளுக்கு இரத்த அழுத்தம் முக்கியம் என்பதால், அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். உயர் இரத்த அழுத்தம் நம் சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

அதேப்போல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களை சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ளும்.  புகைப்பிடிப்பவர்களையும் சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. 

Tags:

0 Responses to “நமது உடலின் சிறுநீரகத்தின் பயன்பாடுகள் - இதோ உங்களுக்காக..!”

Post a Comment

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2014 தமிழ் 4 தமிழன்